வி.சுகிர்தகுமார்
இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என கடந்த அரசாங்கங்கள் எவ்வாறு கூறியதோ அதனையே என்பிபி அரசாங்கமும் சர்வதேசத்திற்கு கூறுகின்றது. ஆகவேதான் இதற்கெதிராக நாங்கள் குரல் கொடுத்து சர்வதேசத்திடம் நீதி வேண்டி நிற்கின்றோம் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆகவே நமது இனஅழிப்பு தொடர்பில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற நிகழ்வுகள் மூலம் எமது அடுத்த சந்ததிக்கு நாம் அடைந்த துயரங்கள் தொடர்பில் தெளிவூட்டவேண்டி இருக்கின்றது.
இன்று கனடா நாட்டிலே தமிழ் இனப்படுகொலை தொடர்பான தூபி அமைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா பாராளுமன்றத்திலே தமிழ் இனப்படுகொலை நடந்துள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு;ள்ளது. இதன் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு சர்வதேசத்தின் மன்றாடி கேட்கின்றோம் என்றார்.
அக்கரைப்பற்று பனங்காடு கேணிக்கரைப்; பிள்ளையார் ஆலயத்தில் தமிழரசுக்கட்சியின் மூலம் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புஸ்பராஜ்; தலைமையில் நேற்று மாலை (18)இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் உயர்நீத்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
; இதேநேரம் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதில் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச தலைவர் உள்ளிட்ட பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment