நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "மாணவர் மகிமை" வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு/ கமு/ அல் - மஸ்லம் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி திண்மக் கழிவகற்றும் தொட்டிகள் இன்று 2025.05.30 வழங்கி வைக்கப்பட்டன . இது தொடர்பான நிகழ்வு நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலய மண்டபத்தில் அதிபர் இஷட் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஐ எம் நிஸ்மி, செயற்பாட்டுப் பணிப்பாளர் ஏ புஹாது ஆகியோர் கலந்து கொண்டு திண்மக் கழிவகற்றலுக்கான பிளாஸ்டிக் தொட்டிகளை வழங்கி வைத்தனர்.


Post a Comment
Post a Comment