வவுணதீவில் பக்கத்து வீட்டுகாரன் மீது துப்பாகி பிரயோகத்தில் ஒருவர் படுகாயம் துப்பாகி சூடு நடாத்தியவர் கைது---
(கனகராசா சரவணன்;)
மட்டக்களப்பு வவுணதீவில் குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு காரன் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாகி பிரயோகம் மேற்கொண்டவரை கைது செய்துள்ளதுடன் துப்பாகி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளளர்
இதுபற்றி தெரியவருவதாவது
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின்; வீட்டுக்கு அருகிலுள்ள அவரது சகோதரனின் காணியில் குடிநீருக்காக தேசிய நீர்வழங்கல் சபையினால் குடிநிரை பெற்றுள்ள குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வரும் துப்பாக்கி பிரயயோகம் மேற்கொண்டவர பாவித்துவந்த நிலையில் அதற்கான பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீரை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரணிடம் தண்ணீரை பாவித்து விட்டு ஏன் அதற்கான பணத்தை செலுத்த வில்லை என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இந்த நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியினால் பக்கத்து வீட்டுக்காரன் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்டதில் கால் துடையில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாகி ஒன்றையும் மீட்டனர்
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment