கருணாலயத்தின் ஸ்தாபகர் திருமதி சீதா விவேக் குடும்பத்தின் நான்காவது வைத்தியர்



 



தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தின் ஸ்தாபகர் திருமதி சீதா விவேக் குடும்பத்தின் நான்காவது வைத்தியர்...


ஜே.கே.யதுர்ஷன்


அம்பாறை மாவட்டம் திருக்கோவிலில் அமைந்துள்ள தாமரைக்குளம் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கை மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் சமூக சேவைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் ஷீரடி சாயி கருணாலயத்தின் ஸ்தாபகர் மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த திருமதி சீதா விவேக் அவர்களின் குடும்பத்தில் நான்காவது வைத்தியராக திருமதி V. சஜித்தா இன்றைய தினம் பட்டம் பெற்றுள்ளார்.


இருப்பினும், இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே மூன்று பேர் மருத்துவத் துறையில் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது திருமதி சீதா விவேக் அவர்களின் மூன்றாவது புதல்வி திரு. V. சஜித்தா வைத்திய பட்டம் பெற்று, குடும்பத்தின் நான்காவது மருத்துவராக உயர்ந்துள்ளார் என்பது பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கும் நிகழ்வாகும்.


இவ்வைத்திய பட்டமளிப்பு விழா மத்திய ஐரோப்பாவின் ஸ்லோவாகியா குடியரசில் உள்ள பராகா நகரில் நடைபெற்றது என்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது