விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா!





 ( வி.ரி.சகாதேவராஜா)


முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு விநாயகபுரத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.


தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைகளத்துடன் இணைந்து நடாத்திய   நிகழ்வு விநாயகபுரம் சக்தி மகா வித்தியாலயத்திலும் கனிஷ்ட வித்தியாலயத்திலும் நடைபெற்றது.

திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் பணிப்பாளர் கண.இராசரெத்தினம்( கண்ணன்) முன்னிலை அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்துசமய குரு ஆறுமுக கிருபாகர குருக்கள் சமய கிரியைகளை நடாத்தி வைத்தார்.

  பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன்  
பாடசாலைகளுக்கான  சுவாமியின்  திருவுருவப்படங்களும் வழங்கி வைக்கப்பட்டன.