வி.சுகிர்தகுமார்
உலக சுற்றாடல் தினம் வாரம் கடந்த 30ஆம் தொடக்கம் ,நாளை 05ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு கடற்கரை, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(04) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் கடற்கரைப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் தம்மரெத்தின சிங்கள பாடசாலை மாணவர்கள் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படைப்பிரிவினர் பிரதேச சபை ஊழியர்கள் பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவு, கரையோரம் பேணல் திணைக்களப் பிரிவு, பொருளாதார அபிவிருத்திப் பிரிவு, உத்தியோகத்தர்கள்;, பொது சமூக நலன் தன்னார்வலரகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கடற்கரைப் பிரதேசத்திற்கு வருகை தரும் பொது மக்களால் பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த பொருட்கள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்கரை சுற்றாடலைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.

.jpg)

Post a Comment
Post a Comment