"வருடாந்த சட்ட இளைஞர் மாநாடு 2025”



 


"வருடாந்த சட்ட இளைஞர் மாநாடு 2025” கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது. 


நீதிபதி நவாஸ்: “அர்ப்பணிப்பு, ஒழுக்கம்—டிஜிடல் கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துங்கள்”


கொழும்பு, 12 ஜூலை மாதம் 2025 — இலங்கை சட்ட இளைஞர் சமூகம் (legal youth community Sri Lanka) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் சட்ட மாநாடு 2025 இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய அருங்காட்சியக அரங்க ம், கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து சட்ட மாணவர்கள், இளம் சட்டத்தரணிகள் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.


மாநாட்டில் 10 சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்று, குற்றவியல், அரசியலமைப்பு சட்டம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சட்டம், வர்த்தக சட்டம், சர்வதேச சட்டம், புலமைச் சொத்துச் சட்டம் மற்றும் மாற்று பிணக்குத்தீர்ப்பு முறைமைகள் போன்ற 8 முக்கிய சட்டத் துறைகளில் விரிவுரைகள் நடைபெற்றன.



பிரதம அதிதியின் சிறப்புறை


பிரதம அதிதி, நீதியரசர்  A.H.M.D. நவாஸ், இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி, இளம் வழக்கறிஞர்களை நோக்கி உரையாற்றினார். சட்டத்தின் அடிப்படைகளை ஆழமாகப் படித்து, வழக்குகளால் பிரயோக பயிற்சி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


நீதியரசர் A.H.M.D. நவாஸ் அவர்கள் மூன்று முதுமானிப்பட்டங்கள் பெற்றிருந்தாலும், “Master’s அல்லது PhD பட்டங்கள் மட்டும் நல்ல வழக்கறிஞரை உருவாக்காது. மாறாக அர்ப்பணிப்பு, தெளிவான சிந்தனை, தொடர்ந்து வாசிப்பதே ஒருவரை நல்ல வழக்கறிஞராக்கும்.” என கருத்து தெரிவித்தார்.



மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில், ChatGPT போன்ற AI உபகரணங்களால் உருவாக்கப்பட்ட பொய்யாக புனைய்யப்பட்ட வழக்குப்பதிவுகளை சமர்ப்பித்த ஒரு வழக்கை உதாரணமாக எடுத்தார். “AI‑ஐ நம்பிக்கையோடு பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொரு தகவலையும் சரிபார்க்கும் பொறுப்பும் விமர்சன சிந்தனையும் அவசியம்” என குறிப்பிட்டார்.


அவருடைய நண்பர்களான இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் — தலைமை நீதிபதி பூஷன் கவாய், நீதிபதி சூர்ய காந்த்  ஆகியோர் கூட இதே பேச்சுக்களை விவாதித்து வருவதாகவும், மலிந்துபோன AI கருவிகள் உண்டாக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சிறிந்த நடைமுறை தேவை என்றும் தெரிவித்தார்.


இலங்கை வழக்குகளில் பிரசித்தம் பெற்ற “Queen v. kularathne ” வழக்கு Privy Council‑இல் மேற்கோள்காட்டபட்டதை நினைவூட்டினார். இது இலங்கையின் சட்ட மரபின் வலிமையை வெளிப்படுத்தும் சிறந்த உதாரணம் என்றும், “நமது நாட்டின் முன்னேற்றம் ஒரு பொறுப்புள்ள, அறிவாய்ந்த சட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது” என்றும் கூறினார்.



சிறப்புரை : அரசியலமைப்பு சட்டம்  மற்றும் குடிமக்கள் கடமை


சிறப்புரை உரையாளர், கனம். Dr. விஜயதாச ராஜபக்ஷ, ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய பங்கு குறித்து உரையாற்றினார். சமூகத்தையும், சட்ட மேலாண்மையையும் பாதுகாக்கும் விதமாக இளைஞர்  ஈடுபட வேண்டியது பற்றியும் அவர் வலியுறுத்தினார்.



 கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்கள் 


மாநாட்டில் பங்கேற்ற முக்கிய பிரபல வழக்கறிஞர் குழு:

யு. ஆர். டி.  சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி– குற்றவியல் சட்டம்

வசந்த பெரேரா , துணை சொலிசிடர் ஜெனரல் – குற்றவியல் சட்டம்

பேராசிரியர் சனத் விஜேசிங்க – பதிப்புரிமை மற்றும் காப்புரிமை.

Dr. சரணி குணதிலக – நடுவர் தீர்வு vs இணக்கம்

லக்மாலி மனம்பெரி – சர்வதேச சட்டம்

அஸ்வினி நடேசன், , Dr. சதுர வர்ணசூரிய – ஆய்வு மற்றும் பரீட்சை ஆய்வு

Dr. சுனில் அபேரத்ண – செயற்கை நுண்ணறிவு மற்றும் சட்டம்


பங்கேற்பாளர்கள் வெறும் கேட்போராக மட்டும் இல்லாமல்,   கலந்துரையாடல்களில்  பங்கேற்று கருத்துக்களைப் பரிமாறினர்.



சட்ட எதிர்காலத்திற்கான ஒரு வலுவான செய்தி


வருடாந்த சட்ட இளைஞர் மாநாடு 2025  கட்டமைப்பு மற்றும் நவீன சட்டத் சூழலுக்கு பொருந்திய வழிகாட்டியைக்கூடப் பெற்றது. இது நீதி, கடமை, தகுந்த மாற்றம் மற்றும் நீதிக்கு அர்ப்பணிப்பு கொண்ட சட்ட இலக்குகளை உருவாக்கும் மறுமொழியை வழங்கியது.