நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு இம்முறை உறுப்பினர்களாக தெரிவாகிய உறுப்பினர்களுக்கான "சபை நடவடிக்கைகள் மற்றும் சபை கூட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான செயலமர்வு" என்ற தலைப்பிலான செயலமர்வு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வுக்கு பிரதித் தவிசாளர் எம்.எப்.நஜீத், பிரதேச சபை செயலாளர் எல்.எம்.இர்பான், உள்ளூராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள், புதிதாக தெரிவான பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)

Post a Comment
Post a Comment