கேரி ஆனந்தசங்கரிக்கு எதிராக கனடாவில் விசாரணை



 



கேரி ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரின் குடியுரிமை கடிதம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்


கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதற்கு ஆதரவாக கடிதம் ஒன்றை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசாங்கத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


கனேடிய ஊடக வட்டாரங்களின்படி, இந்தக் கடிதம் தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக, அமைச்சரின் நடவடிக்கைகள் குடிவரவு மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு நெறிமுறைகளையும் அல்லது சட்டக் கட்டமைப்புகளையும் மீறியதா என்பது குறித்து உத்தியோகபூர்வ விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதன் உறுப்பினர்கள் தொடர்பான எந்தவொரு பரிந்துரையும் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.


இந்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஆனந்தசங்கரி அல்லது அவரது அலுவலகம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.