பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்



 


மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தி குழுவினர், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை விபத்து நடந்ததுமே உயர்மட்டக் குழுவை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்."


விளம்பரம்


குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், "மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை வீழ்ந்துள்ளன. மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் ஒரு ஸ்லாப் (slab) விழுந்ததால் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன" என கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு – என்ன நிலவரம்?

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு - குடும்பத்தின் தரப்பில் தகவல்

பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம், ஈறு நோய்

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?

கடலூர், ரயில்வே கேட் விபத்து, கேட் கீப்பிங், ரயில்வே 

கடலூர்: மூடிய கேட்டை ரயில் வரும் முன்பே திறக்க முடியுமா? ரயில் எவ்வளவு வேகத்தில் மோதியது?

கடலூர், ரயில்வே கேட், பள்ளி வேன், விபத்து, பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

"இரு குழந்தைகளையும் இழந்து விட்டேன்" - கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தந்தை வேதனை

End of அதிகம் படிக்கப்பட்டது

ஷார்ட் வீடியோ

Play video, "குஜராத்: பாலம் உடைந்து தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்", கால அளவு 0,33

00:33


காணொளிக் குறிப்பு,குஜராத்: பாலம் உடைந்து தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு - குடும்பத்தின் தரப்பில் தகவல்

8 ஜூலை 2025

"இரு குழந்தைகளையும் இழந்து விட்டேன்" - கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தந்தை வேதனை

9 ஜூலை 2025

மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் இந்த பாலம் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. தற்போது, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து சில படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றில், பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே டிரக் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. மற்றொருபுறம், ஆற்றில் சில வாகனங்கள் விழுந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.


இந்த விபத்து தொடர்பாக, ஆனந்த் மாவட்ட ஆட்சியர் பிரவீன் கௌத்ரி பிபிசியிடம் கூறுகையில், "விபத்து நடந்த வதோதரா பகுதியில் முழு அளவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்தை மட்டும் அங்கே நிறுத்தியுள்ளோம். வதோதரா மாவட்ட எல்லைக்குள்ளும் இந்த பாலம் வருகிறது. ஆனந்த் மற்றும் சௌராஷ்டிராவிலிருந்து வதோதரா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன." என தெரிவித்தார்.


சம்பவ இடத்திற்குச் சென்ற உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?

சம்பவ இடத்தில் சிக்கியவர்களை மீட்ட எகல்பரா கிராம தலைவர் தஞ்சிபாய் பதியார் கூறுகையில், "பாலம் இடிந்ததாக கேள்விபட்டதும் அரை மணி நேரத்தில் இங்கு வந்துவிட்டேன். நாங்கள் இங்கு வந்தபோது. நான்கு கார்களும், ஒரு பைக்கும் ஆற்றில் விழுந்திருந்தன." என்றார்.


பாலம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.


முஜ்பூர் கிராமத் தலைவர் அபேசிங் பர்மார் பாலம் மோசமான நிலையில் இருந்ததாகவும் அனைத்து இடங்களிலும் குழிகள் இருந்ததாகவும் தெரிவித்தார். பாலத்தில் கம்பிகள் வெளியே தெரிந்தன. பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பாலம் இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்தனர். "நாங்கள் பட்கானா என்கிற பகுதிக்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடன் ஆறு பேர் இருந்தனர். அவர்களில் என்னுடைய இளைய மகனும், கணவரும், மருமகனும், மைத்துனரும், மற்றவர்களும் உள்ளே இருந்தனர்." என ஒரு பெண்மணி தெரிவித்தார்.


குஜராத் பால விபத்து பட மூலாதாரம்,@Info_Vadodara

படக்குறிப்பு,மீட்புப் பணிகள்

மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஜக்மர் சிங் பதியா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "நான் 7.30 மணிக்கு விபத்து பற்றி கேள்விபட்டேன். அதன் பிறகு இங்கு ஓடி வந்தேன். ஒரு ரிக்ஷா, லாரி, ஈகோ கார் மற்றும் சரக்கு ஏற்றும் மேக்ஸ் வாகனம் ஆற்றுக்குள் இருந்தன" என்றார்.


"மக்கள் மற்றவர்களையும் அழைத்தனர். காவல்துறையினரும் வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து சில சடலங்களை மீட்டனர். சில உடல்கள் இன்னும் மீட்கப்பட உள்ளன. தற்போது ஆற்றில் நான்கு அல்லது ஐந்து வாகனங்கள் உள்ளன, ஆனால் எந்த பைக்கும் இல்லை" என்றார்.


"இந்த விபத்தில் எனது கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிக்கினர், அதில் ஒரு பெண்மணி மட்டுமே பிழைத்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என மேலும் தெரிவித்தார்.


மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராஜ்தீப் பதியார் பேசுகையில், "நாங்கள் காலை எட்டு மணியில் இருந்து இங்கு உள்ளோம். நாங்கள் கார்களை கயிறு கட்டி வெளியில் இழுத்தோம். உயிருடன் இருந்த 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்." என்றார்.


முதலில் கிராம மக்கள் வந்ததாகக் கூறும் அவர் அதனைத் தொடர்ந்து மற்றவர்களும் வந்ததாகத் தெரிவித்தார்.


விபத்து நடந்த பகுதியை நோக்கி அதிக அளவிலான மக்களும் பாதசாரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அல்லாமல் சில காவலர்களும் வாகனங்களும் பாலத்தின் மீது உள்ளது. ஒரு காணொளி சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது.


குஜராத் பால விபத்துபட மூலாதாரம்,ugc

முதலமைச்சர் கூறியது என்ன?

விபத்தில் இறந்தவர்களுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.


"கம்பீரா பாலத்தின் ஒருபகுதி உடைந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்." என்றார்.


பாலம் எவ்வளவு பழமையானது?

குஜராத் பால விபத்துபட மூலாதாரம்,Nachiket Mehta

மாநில அமைச்சர் ரிஷிகேஷ் படேல் கூறுகையில், "1985-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலம் தொடர்ச்சியாக அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த விபத்து துரதிருஷ்டவசமானது. ரூ. 212 கோடி செலவீட்டில், புதிய பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார். அதற்காக ஒப்பந்தம் கோருவது, மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றார்.


சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் முதன்மை பொறியாளர் சி.பி. படேல் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "இந்த பாலம் 1985ம் ஆண்டில் திறக்கப்பட்டதாக" தெரிவித்தார்.


இந்த விபத்து எப்படி நடந்தது என கேட்டபோது, "இதுகுறித்த விசாரணைக்குப் பிறகே காரணம் தெரியும். அனைத்துப் பாலங்களிலும் பருவமழைக்கு முன்னதாகவும் அதற்கு பின்னரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆவணப் பதிவுகளை ஆராய்ந்த பின்னர், இந்த பாலத்தின் நிலை குறித்த விவரங்கள் தெரியவரும்" என்றார்.


சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் செயலாளர் பிஆர் படேலியா கூறுகையில், "இந்த பாலத்தின் ஒருபகுதி மஹி ஆற்றில் சேதமடைந்து விழுந்ததாக இன்று காலையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆராய நிபுணர்கள் குழுவினர் நிகழ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார்.


பாஜகவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

குஜராத் பால விபத்துபட மூலாதாரம்,ugc

மராத்தி பேசாத வணிகர்கள் மீது தாக்குதல் - மகாராஷ்டிராவை உலுக்கும் மொழிப் பிரச்னை

கடலூர்: மூடிய கேட்டை ரயில் வரும் முன்பே திறக்க முடியுமா? ரயில் எவ்வளவு வேகத்தில் மோதியது?

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?

வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை டிரோன் மூலம் காப்பாற்றிய விவசாயி

குஜராத் பால விபத்து

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா கூறுகையில், "இம்மாதிரியான விபத்துகள் மீண்டும் மீண்டும் நிகழ்வது ஏன்? இந்த பாலம் ஆபத்தான அளவில் இருந்திருந்தால், முன்பே அது சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது மூடப்பட்டிருக்க வேண்டும். அரசின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது." என்றார்.


ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி கூறுகையில், "இந்த பால விபத்து மனித தவறால் நிகழ்ந்துள்ளது. ஒரு டிரக் உட்பட 4 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளன. பொதுமக்கள் வரி செலுத்தும்போது அரசாங்கமும் பாஜகவும் ஒரு வலுவான உள்கட்டமைப்பை தருகின்றனவா என்பதுதான் கேள்வி." என தெரிவித்தார்.


இதுதொடர்பாக பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய அவர், "ஒரு பாலத்தைக் கடந்து செல்லும் போது இன்றைக்கு ஒருவர் அச்சத்தில் உள்ளார். அந்த பாலம் சேதமடைந்த நிலையில் இருந்திருந்தால், ஏன் அப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தவில்லை?" என அவர் கேள்வியெழுப்பினார்.