Rep/J.Refayathulla
மஷ்ஹூர் ஆய்வு நூலகத் திறப்பு விழாவும் மௌலவி நினைவுப் பேருரையும் நினைவுப் பகிர்வும் இன்று மாலை 4:30 முதல் 7:30 வரை அக்கரைப்பற்று அந்நூர் கலாசார மண்டபத்தில், இடம்பெற்றது.
மஷ்ஹூர் ஆராய்ச்சி நூலகம் (Mashoor Research Library- MRL) நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நூலகமாக இது அமைந்திருக்கும். முன் அனுமதி பெற்று, நூலகத்திற்கு நேரில் வந்து நூல்களை வாசிக்க (Reference only) முடியும். இதில் நூல்களை இரவல் பெறும் வசதிகள் (Lending Facilities) இருக்காது என்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படிப்படியாக அரிய நூல்கள் பல இங்கு சேகரிக்கப்படும். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் வெளிவந்திருக்கும் அனைத்து நூல்களையும் சேகரிக்கும் திட்டத்தை முதலில் செயற்படுத்தவுள்ளோம்.



Post a Comment
Post a Comment