எக்ஸ்-பிரஸ் பேர்ல் விபத்து- உயர்நீதிமன்றம் விசேட உத்தரவு






 எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவில் தொடர்புடைய அரசு சாராத தரப்பினர் ஒரு வருடத்திற்குள் ஆரம்ப தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தை திறைசேரி செயலாளருக்கு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மிக மோசமான கடல்சார் பேரழிவில் கப்பலால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு இந்த நட்டஈடு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.