மத்தியஸ்தம் செயலமர்வில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



 


பாறுக் ஷிஹான்


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன்பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசிய  பாடசாலையில் இன்று காலை நடைபெற்றது.

பாடசாலை மத்தியஸ்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நீதி அமைச்சினால்  இணைக்கப்பட்டுள்ள  மத்தியஸ்த உத்தியோகத்தர் மாஜிதா ஒருங்கிணைப்பில் கடந்த பெப்ரவரி மாதம் 3, 5, 6, ஆம் திகதிகள்  இப்பயிற்சி செயலமர்வானது  3 நாட்கள் நடைபெற்றிருந்தது.

இதற்கமைய குறத்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் இலச்சினை என்பவற்றை வழங்கும் நிகழ்வும் முறைப்பாட்டு பெட்டி என்பவற்றை அறிமுகம் செய்யும் நிகழ்வும்  ஆராதனை நிகழ்வில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிக்கா மற்றும் மத்தியத அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எல் .மாஜிதா மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி முதல்வர் எம்.ஐ ஜாபிர் முன்னிலையில் இந்நிகழ்வு சிறப்பாக அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.