யார் இந்த ஹூத்திகள்?






 செங்கடலில் ஏமனின் ஹூத்திகள் தாக்குதல் நடத்தி சரக்குக் கப்பல் ஒன்றை மூழ்கடித்த சம்பவத்தில் பத்து பேர் காப்பற்றப்பட்டுள்ளனர், மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

நவம்பர் 2023ஆம் ஆண்டு முதல் அவர்கள் சுமார் 70 வணிக கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் சிறு படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளயுள்ளனர், நான்கு கப்பல்களை மூழ்கடித்துள்ளனர், ஐந்தாவதாக ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளனர். அதோடு அவர்கள் குறைந்தது ஏழு பேரைக் கொன்றுள்ளனர்.

ஹூத்திகள், இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினர் என்பதுடன், காஸாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொலாவுடன் இணைந்து "எதிர்ப்பு அச்சின்" ஓர் அங்கமாக உள்ளனர்.

இந்தக் குழு இஸ்ரேலுடன் தொடர்புடையவை என நம்பும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.