செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பூரண ஒத்துழைப்பு



 


செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (08) பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர்,"குற்றப்புலனாய்வு திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட விசாரணையாளர்கள் அதற்காகவே செயற்பட்டு வருகின்றனர். 

நீதிமன்ற தேவைக்கு அமைய அதற்கு உரிய விசாரணைகள் அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும். 

நீதவான், பொலிஸார், அகழ்வுடன் தொடர்புடைய நிபுணர் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றில் முன்வைப்பர். 

அதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. 

அதன் பெறுபேறுகள் என்னவென்று பார்ப்போம்" என்றார்.