இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து



 


இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 


இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது. 

இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர். 

தீப்பிடித்த பிறகு பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து வௌியேறியுள்ளனர். 

விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.