பாறுக் ஷிஹான்
கமு /அஸ்-ஸுஹரா பாடசாலையின் நீண்டகாலத் தேவையான நீர் தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று (12 ) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டதுடன் இப் பாடசாலை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் தனது உறுதிப்பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் YWMA தலைவி பவாஷா தாஹா மற்றும் CSMWA தலைவி சீனியா தாஷிம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சமூக பங்களிப்பை ஒட்டுமொத்தமாக பிரதிபலித்தனர்.
இப்பாடசாலை அதிபர் மஜீதியா அவர்களின் தாராள திட்டமிடலின் கீழ் விழா நடைபெற்று பாடசாலையின் எதிர்கால தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் நிகழ்ந்தது.
மேலும் இவ் முயற்சி, மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாகும்.
.jpg)

Post a Comment
Post a Comment