அழகான கடற்கரை சூழலை உருவாக்குவோம்



 


.சுகிர்தகுமார்     


 அழகான கடற்கரை சூழலை உருவாக்குவோம் எனும் தலைப்பில்; கிளின் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டம் இராணுவத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் இன்று (29)முன்னெடுக்கப்பட்டது....
கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்ததான கடற்கரை பிரதேசத்தை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு கடற்கரையில் காணப்படும் கழிவுகளை வகைப்படுத்தி அகற்றும் பணி இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டது.
 அக்கரைப்பற்று இராணுவமுகாமின் 241ஆம் படைப்பிரிவு மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஆலையடிவேம்பு பிரதேச சபை இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.
அக்கரைப்பற்று 241 ஆம் காலாட் படைப்பிவின் கட்;டளை அதிகாரி கேணல் சுகத் திசாநாயக்காவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற சிரமதானப்பணியில்  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச உப தவிசாளர் க.ரகுபதி உள்ளிட்ட இராணுவத்தினர் அரச அதிகாரிகள் பிரதேச சபை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அரசின் சிறந்த இவ்வேலைத்திட்டத்திற்கு ஒவ்வொரு அரச அதிகாரிகளும் பொதுமக்களும் முழுதான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பிரதேச செயலாளர் ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.
இதன் பின்னராக கடற்கரை பிரதேசத்தில் சிரமதான வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் நாளாந்தம் பொதுமக்களால் போடப்படும் கழிவுகளை வகைப்படுத்தி பிரதேச சபையின் ஊடாக அவற்றை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.