இரண்டு சுவிட்சுகளும் 'கட்-ஆஃப்' நிலைக்கு சென்றுவிட்டது, விமானம் விபத்துக்குள்ளானது



 கடந்த மாதம் குஜராத்தின் ஆமதாபாத்
தில் இருந்து லண்டனுக்கு செல்ல வேண்டிய விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி விமானம் இயங்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே எரிபொருளை கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் 'கட்-ஆஃப்' நிலைக்கு சென்றுவிட்டது. இந்த இரண்டு சுவிட்சுகள் தான் என்ஜினை நிறுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.