கனடா விமான நிலையத்தில் பணிப்பெண்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 600-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான எயார் கனடா நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணிப்பெண்கள் தங்களதுசம்பள உயர்வு, விமானத்தில் செலவழித்த நேரத்துக்கு ஏற்றாற்போல் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் பணிபுரிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment