அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் ஹர்த்தால் பிசுபிசுத்து போனது.



 .



சுகிர்தகுமார்     


 அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் ஹர்த்தால் பிசுபிசுத்து போனதை அவதானிக்க முடிந்தது.
அக்கரைப்பற்றின் மத்திய சந்தையில் வியாபார நிலையங்கள் வங்கிகள் திறந்திருந்ததுடன்; வழமைபோன்று பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக்களும் இடம்பெற்றன.
அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களிலும் வழமைபோன்று செயற்பாடுகள் இடம்பெற்றதுடன் பொதுமக்கள் தமது கடமைகளை நிறைவேற்றினர்.
இந்நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
இன்றைய ஹர்த்தால் குறிப்பிடத்தக்களவு வெற்றியளிக்கவில்லை என்பதுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.