தொற்றா நோய் தொடர்பிலான அரச அதிகாரிகளை பரிசோதிக்கும் நிகழ்வும் விழிப்புணர்வு நிகழ்வும்




(.சுகிர்தகுமார்)


 ஆலையடிவேம்பு சுகாதார சேவைகள் பணிமனையால் முன்னெடுக்கப்பட்ட தொற்றா நோய் தொடர்பிலான அரச அதிகாரிகளை பரிசோதிக்கும் நிகழ்வும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று(29) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி பரூசா நக்பர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் கோ.சசிதரன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அரச உத்தியோகத்தர்களிடம் காணப்படும் தொற்றா நோய்களினை பரிசோதித்ததுடன் அவர்களுக்கு நோய் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டன.