ஹர்தாலுக்கு,திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு ஆதரவு



 


தமிழ் அரசின் வடகிழக்கு தழுவிய ஹர்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சுயேட்சை குழு ஆதரவு



எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர்.சு.சசிக்குமார் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவினை அளிப்பதாக தெரிவித்ததோடு இக் குறித்த ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான ஆதரவினை வழங்கும்படி கோரியுள்ளார்.

மேற்படி அவர் தெரிவிக்கையில் எமது வடகிழக்கு தமிழர் தாயக பகுதியில் அதீத ராணுவப் பிரசன்னமும் முல்லைத்தீவில் இறந்த இளைஞனுக்கு நீதி வேண்டியும் செம்மணி போன்ற இனப்படுகொலைக்கு நீதியை நிறுத்தகோரியும் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் இது கட்சி பேதங்களுக்கு அப்பால் இனத்தின் நன்மை கருதிய ஹர்த்தால் ஆகவே அனைவரையும் ஒன்றாக ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம் என்றார்