பாறுக் ஷிஹான்-
'அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடல்'கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் சனிக்கிழமை (23) ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது பிராந்திய பணிப்பாளர் வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்டதுடன், வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்றிலும் பங்கேற்றார்.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வைத்தியசாலையின் பற்றாக்குறைகள் மற்றும் தேவைகள் குறித்தும் பணிப்பாளர் கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் எதிர்காலத்தில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.அலாவுடீன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment