பனங்காடு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டம்




 பாறுக் ஷிஹான்


பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று அவ்வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை (23) இடம்பெற்றது.

பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சக்கீல்   ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இக்கூட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.


இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கரண், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.தர்மதாச, முன்னாள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.பபாகரன், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் விஜயம் செய்து பார்வையிட்ட பணிப்பாளர் தற்போதைய தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டதுடன் அத்தியாவசியத் தேவைகளை உடன் நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.