(வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மாடித் தோட்டத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் நடுகை செய்யப்பட்ட புதினாக்கீரைக் கன்றுகளின் அறுவடை நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) இடம்பெற்றது.
இதன்போது களுவாஞ்சிகுடி விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் ஏ.ஐ. றிஃகியினால் புதினாவின் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாக அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


Post a Comment
Post a Comment