மட்/மம/அல் ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மடிக் கணினி மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.
காத்தான்குடி மட்/மம/அல் ஹிறா மகா வித்தியாலயத்தின் 1988 க.பொ.த (சா/த) பழைய மாணவர்களினால் பாடசாலை மாணவர்களின் கல்வி மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் 10 மடிக்கணினிகள் மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (07) பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.பீ.எம்.றபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் 1988 க.பொ.த (சா/த) பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர்,பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


Post a Comment
Post a Comment