காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் சர்வதேச போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்



 



காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் சர்வதேச போட்டியில் சாதனை.


புதிய காத்தான்குடி 03 ஐச் சேர்ந்த தரம் 8 இல் கல்விகற்கும் முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் எனும் மாணவன் 14.08.2025 அன்று வியட்நாம் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளார். 


இம் மாணவன் தனது ஆரம்பக் கல்வியினை  காத்தான்குடி பாத்திமா பாலிகா பாடசாலையிலும் , தரம் 6 தொடக்கம் தற்பொழுது வரை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 


31 நாடுகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் இலங்கை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 மாணவர்கள் கலந்துகொண்டார்கள். அதில் 2 மாணவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

கடந்த வருடம் இந்தியா லக்ணோவில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருந்தமையும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.  


இம்மாணவன் ஊருக்கு ,பாடசாலைக்கு,கிழக்கு மாகாணத்திற்கு,இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன் எமது ஆண் மாணவர்களுக்கும் முன்மாதிரிமிக்க ஒரு மாணவனாக திகழ்கின்றார்.


இன்றைய தினம் இம்மாணவன் வாகனப் பேரணியில்  மட்டக்களப்பு நகரைச் சுற்றி ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டதுடன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இம் மாணவனுக்கு கௌரவிப்பு நிகழ்வும் வெகுவிமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


தகவல்

பொறுப்பாசிரியர்

இஸ்லாம் பிரிவு

மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி