உத்தராகண்ட் மேக வெடிப்பு: 'என் கண் முன்னே ஹோட்டல்கள் அடித்துச் செல்லப்பட்டன'





 உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் சிக்கிக்கொண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.

உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கதேராவின் (ஆழமான பள்ளம் அல்லது வடிகால்) நீர்மட்டம் திடீரென அதிகரித்து, தாராலி கிராமத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்திற்கு ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் தாராலி கிராமத்தின் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்த காட்சி வெளியாகியிருக்கிறது. இங்கு அதிக அளவு விடுதிகளும் உணவகங்களும் உள்ளன.