இந்திய பிரதமர் மோதியின் சீனப் பயணம் அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?



 டொனால்ட் டிரம்பின் அமெரிக்க வரிவிதிப்புகளின் தாக்கம் இன்னும் மனதை உறுத்தும் முக்கிய விசயமாக இருக்கும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி சீனா சென்றுள்ளார்.


புதன்கிழமை முதல், வைரங்கள் மற்றும் இறால் போன்ற அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய பொருட்களின் மீதான வரி இப்போது 50% ஆக உள்ளது – இது ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதற்கான தண்டனை என்று அமெரிக்க அதிபர் கூறுகிறார்.



இந்த வரிகள் இந்தியாவின் துடிப்பான ஏற்றுமதித் துறை மற்றும் அதன் வளர்ச்சி இலக்குகள் மீது நீடித்த காயங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


சீனாவின் ஷி ஜின்பிங்கும் மந்தமான சீன பொருளாதாரத்தை புதுப்பிக்க முயற்சிக்கிறார், இந்த நேரத்தில் வானளாவிய அமெரிக்க வரிகள் அவரது திட்டங்களைத் தடம்புரளச் செய்யும் வகையில் அச்சுறுத்துகின்றன.


இந்த பின்னணியில், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துள்ளனனர். பெரும்பாலும் எல்லை தகராறுகள் காரணமாக இரு நாட்டு உறவுகளும் அவநம்பிக்கைக்குரியதாக இருந்தது. இப்போது இரு தலைவர்களும் தங்கள் உறவில் ஒரு புத்துணர்வை எதிர்பார்க்கலாம்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கொத்தவரங்காய் புகைப்படம் 

அமெரிக்காவுக்கு இந்தியாவின் கொத்தவரங்காய் ஏன் தேவை? கொத்தவரை பிசினை வைத்து என்ன செய்கிறது?

அமெரிக்க வரிகள், டிரம்ப் வரிகள், இந்தியா வரி 

இந்தியா மீதான வரி விதிப்பு - அமெரிக்கா தனக்குத் தானே பிரச்னை தேடிக்கொள்கிறதா?

இந்தியா-அமெரிக்கா, உறவு, சீனா, ரஷ்யா, ரஷ்ய எண்ணெய், டிரம்ப் வரி

வரி விதிக்கும் அமெரிக்கா, வரவேற்கும் சீனா, வரலாற்று நண்பன் ரஷ்யா - இந்தியா என்ன செய்யப் போகிறது?

இறந்த பிறகும் கடிக்கும் பாம்புகள், இந்தியா, அசாம், 3 பேர் என்ன ஆயினர்? 

பாம்புகள் இறந்து பல மணி நேரம் கழித்தும் மனிதரை 'கடிப்பது' எப்படி?

End of அதிகம் படிக்கப்பட்டது

"எளிமையாகச் சொல்வதானால், இந்த உறவில் என்ன நடக்கிறது என்பது உலகின் பிற பகுதிகளுக்கு முக்கியமானது" என்று சாத்தம் ஹவுஸ் எனும் சிந்தனைக்குழுவைச் சேர்ந்த சிட்டிஜ் பாஜ்பாய் மற்றும் யூ ஜி ஆகியோர் சமீபத்திய தலையங்கத்தில் எழுதினர்.


"மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அமெரிக்கா) நினைத்தது போல் சீனாவுக்கு எதிரான அரணாக இந்தியா ஒருபோதும் இருக்கப் போவதில்லை. மோதியின் சீனப் பயணம் ஒரு சாத்தியமான திருப்புமுனையைக் குறிக்கிறது."


வலுவான உறவு என்றால் என்ன?

இந்தியா மற்றும் சீனா முறையே உலகின் ஐந்தாவது மற்றும் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி மையங்களாக உள்ளன.


ஆனால் இந்தியா பொருளாதார வலிமையில் 2028-ம் ஆண்டில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் பாதையில் உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


"வழக்கமாக, உலகின் மிக முக்கியமான, பெரிய பொருளாதாரங்களான சீனாவும் இந்தியாவும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது" என்று பெய்ஜிங்கில் உள்ள வுசாவா அட்வைசரியின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான கியான் லியு கூறுகிறார்.


ஆனால் இந்த உறவு மிகவும் சவாலானது.


இரு தரப்பினரும் தீர்க்கப்படாத மற்றும் நீண்டகால பிராந்திய சர்ச்சையைக் கொண்டுள்ளனர் - இது மிகவும் பரந்த மற்றும் ஆழமான போட்டியைக் குறிக்கிறது.


2020 ஜூன் மாதம் லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு முழுவதும் வன்முறை வெடித்தது – இது 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான மிக மோசமான பகைமை காலமாக இருந்தது.


இதன் விளைவு பெரும்பாலும் பொருளாதார ரீதியில் இருந்தது - நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது பற்றிய பேச்சுகள் நிறுத்தப்பட்டன, விசாக்கள் மற்றும் சீன முதலீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இது இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களை தாமதப்படுத்தியது. டிக்டாக் உட்பட 200 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்தது.


இந்திய-சீனா வர்த்தக உறவு பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தியாவில் தயாரிக்கப்படும் சீன ஸ்மார்போன்கள் கணிசமான இடத்தை சந்தையில் பிடித்துள்ளன.

"இந்தியா-சீனா உறவுகளை ஆசியாவின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமானதாக‌ பார்க்கும் சக்திகளின் எதிர்பார்ப்புகளை சரியாக எதிர்கொள்ள பேச்சுவார்த்தையே அவசியம்," என்கிறார் IISS நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு, உத்தி, ராஜதந்திர நிபுணர் அன்டோயின் லெவெஸ்க்யூஸ்.


திபெத், தலாய் லாமா மற்றும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை உருவாக்குவதற்கான சீனாவின் திட்டங்கள் குறித்த நீர் தகராறுகள் , பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான பதற்றங்கள் உள்ளிட்ட பிற பிளவுகளும் இரு நாடுகளுக்கு இடையில் உள்ளன.


பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சீனா ஒரு முக்கிய வர்த்தக பங்காளியாக இருக்கும் அதேவேளை, தெற்காசியாவில் உள்ள அதன் பெரும்பாலான அண்டை நாடுகளுடன் இந்தியா தற்போது நல்ல உறவில் இல்லை.


"ஒரு BYD (பிஒய்டி) தொழிற்சாலை இந்தியாவுக்கு வந்தால் நான் ஆச்சரியப்படுவேன், ஆனால் இதில் சில சிறிய அளவிலான வெற்றிகள் இருக்கலாம்" என்று ஆராய்ச்சி நிறுவனமான ஆசியா டிகோடெட் நிறுவனரும் முதன்மை பொருளாதார நிபுணருமான பிரியங்கா கிஷோர் கூறுகிறார்.


நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும், விசாக்களில் அதிக தளர்வுகள் , மற்றும் பிற பொருளாதார ஒப்பந்தங்கள் இருக்கலாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் நிலைப்பாடு மாறிவிட்டது

இருப்பினும், டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவு "நிச்சயமாக ஒரு சங்கடமான கூட்டணி" என்று பிரியங்கா கிஷோர் குறிப்பிடுகிறார்.


"ஒரு கட்டத்தில், சீன செல்வாக்கை மட்டுப்படுத்த அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கி வந்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்று அவர் மேலும் கூறுகிறார்.


ஆனால் அமெரிக்கா மற்றும் அதன் நிலைப்பாடு குறித்து இந்தியா முற்றிலும் குழப்பமடைந்துள்ளது: " இது ஒரு புத்திசாலித்தனமான நகர்வு - மேலும் இந்தியாவும் சீனாவும் உலகின் பன்முகத்தன்மைக்கு வலு சேர்க்கிறது"


மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு மாற்று உலகக் கண்ணோட்டத்தை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ( SCO) கூட்டத்தில் பங்கேற்க மோதி சீனா சென்றுள்ளார். இந்த அமைப்பில் சீனா, இந்தியா, இரான், பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.


கடந்த காலங்களில், இந்தியா இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை வழங்கவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


ஜூன் மாதம் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கூட்டறிக்கை குறித்து இந்தியாவுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடாதது குறித்து இந்தியா ஆட்சேபனைகளை எழுப்பியது. இந்நிகழ்வு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல தசாப்தங்களில் மிக மோசமான மோதல்களுக்கு வழிவகுத்தது.


ஆனால் வாஷிங்டனுடனான டெல்லியின் உறவுகளில் ஏற்பட்ட சரிவு இந்த அமைப்பின் பயன்பாட்டை மீண்டும் கருத்தில் கொள்ள இந்தியாவைத் தூண்டியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


டிரம்பின் வரி யுத்தத்திற்கு மத்தியில், சீனா உலகளாவிய தெற்கின் ஒற்றுமை குறித்து யோசிக்கக் கூடும்.


இந்திய-சீனா வர்த்தக உறவு பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மிரட்டியுள்ளார்.

சீனாவும் இந்தியாவும் உறுப்பினர்களாக இருக்கும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பு டிரம்பின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. அவர் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் மீது, ஏற்கெனவே பேசப்பட்ட வரிகளை விட கூடுதல் வரி விதிப்பதாக மிரட்டியுள்ளார்.


மோதி கடைசியாக ஷி ஜின்பிங்கையும் ரஷ்யாவின் விளாடிமிர் புதினையும் அக்டோபர் 2024-ல் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சந்தித்தார். கடந்த வாரம், சீனா, இந்தியா, ரஷ்யா மூன்று நாடுகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்று ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.


"சீனாவின் உற்பத்தித் திறன், இந்தியாவின் சேவைத் துறை பலம், ரஷ்யாவின் இயற்கை வளங்கள் - இவற்றைப் பயன்படுத்தி அமெரிக்கா மீதான சார்ந்திருத்தலை குறைத்து, ஏற்றுமதி சந்தைகளை பரவலாக்கி, உலக வர்த்தக ஓட்டத்தை மாற்றியமைக்க முடியும்," என்று பஜ்பாய் மற்றும் யூ அவர்களின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.


அதேநேரம் மற்ற பிராந்திய கூட்டணிகளையும் பயன்படுத்த இந்தியா முனைகிறது. மோதி சீனாவுக்குச் செல்லும் வழியில் ஜப்பானுக்கும் செல்கிறார்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சீனா - இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு சாத்தியமா?

இந்தியா தனது உற்பத்திக்காக சீனாவைச் சார்ந்திருக்கிறது, தம் உற்பத்திக்கு‌ தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை அங்கிருந்து வாங்குகிறது.


இந்தியாவின் கடுமையான தொழில்துறை கொள்கைகள் சீனாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தொழில்துறை விநியோகச் சங்கிலி மாறுவது மூலம் கிடைக்கும் பலனை பெறவிடாமல் தடுத்துள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்தியா எலக்ட்ரானிக் உற்பத்தியில்‌ வலுவாக இருப்பதன் காரணமாக அந்த விஷயத்தில் கூட்டுறவுக்கான ஒரு வலுவான‌ வாய்ப்பு உள்ளது என்கிறார்‌ பிரியங்கா கிஷோர்‌.


"ஆப்பிள் நிறுவனம்‌ வியட்நாமில் ஏர்பாட்ஸ் மற்றும் கைக்கடிகாரங்களை தயாரிக்கிறது, இந்தியாவில் ஐஃபோன் தயாரிக்கிறது. எனவே இதில் குழப்பம் இருக்காது" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.


" விசாவிற்கு துரிதமாக அனுமதி‌ கிடைப்பது சீனாவுக்கும் எளிதான வெற்றி. அது இந்தியாவில் நேரடியாகவோ அல்லது முதலீடுகள் மூலமோ இந்திய சந்தைகளில் நுழைய விரும்புகிறது. அமெரிக்க சந்தை வாய்ப்பு குறையும் பிரச்னையை சீனா சமாளிக்கிறது. ஆசியான் சந்தைகளை அது ஏற்கனவே நிரப்பிவிட்டது. ஷீன், டிக்டாக் போன்ற பல சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன," என்கிறார் கிஷோர்.


"145 கோடி மக்களின் சந்தையில் பொருட்களை விற்கும் வாய்ப்பை சீனா வரவேற்கும்." என்கிறார்.


இரு நாட்டு உறவின் சிக்கலைக் கருத்தில் கொண்டால், ஒரே சந்திப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில்லை. சீனா-இந்தியா உறவை மேம்படுத்த நீண்ட காலமெடுக்கும்.


ஆனால் மோதியின் சீனா பயணம் சில விரோதத்தைக் குறைப்பதுடன், இந்தியாவுக்கு வேறு வழிகள் இருக்கின்றன என்ற தெளி