நூருல் ஹுதா உமர்
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான் மற்றும் முஹம்மத் ஆஷிக் ஆகியோர்களால் தங்களின் சபை அமர்வில் கிடைக்கப் பெறுகின்ற மாதாந்த கொடுப்பனவை கல்வி நிலையத்திற்கு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக (10) சம்மாந்துறையில் இயங்கி வரும் மிரர் கல்வி நிலையத்திற்கு வழங்கி வைத்தனர்.
தேர்தல் பிரசாரத்தின் போது கல்வி மேம்பாட்டிற்காக சம்பளத்தை ஒதுக்குவதாக உறுதியளித்திருந்த இவர்கள், அந்த உறுதியை இன்று நடைமுறைப்படுத்தினர். வழங்கப்பட்ட நிதியை கல்வி நிலையத்தின் பெளதீக வசதிகளை மேம்படுத்தவும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் இந் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்வி நிலைய பொறுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து எங்களின் அதிகார காலத்தில் கிடைக்கும் பிரதேச சபை கொடுப்பனவுகளை கல்வி மேம்பாட்டுக்காக கையளிக்க உள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் இதன்போது கருத்து தெரிவித்தார்.
.jpg)

Post a Comment
Post a Comment