யாழ் மாவட்ட சிறப்பு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட சிறப்பு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்து சிக்கல்கள், அவற்றிற்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சாலை மேம்பாட்டு தேவைகள், சில பகுதிகளில் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், தீவுக் குடியிருப்பாளர்களுக்கான கடல்சார் போக்குவரத்து பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணத்துடன் நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் பொதுப் போக்குவரத்து, வணிகப் போக்குவரத்து மற்றும் சந்தைச் சார்ந்த போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் என்.ஏ. வேதநாயகன், மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றக் குழுத் தலைவர் ச. சிறிதரன், மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment