சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் நன்னடத்தைகள் தொடர்பான விசேட விழிப்புணர்வு



 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் நன்னடத்தைகள் தொடர்பான விசேட  விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை இன்றைய தினம் (30.09.2025) ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பாடசாலை பற்சிச்சையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் மாணவர்களின் அதிகப்படியான கைப்பேசி பயன்பாடு குறித்து அறிவுறுத்தல் வழங்கினார். மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது அவர்கள் போஷணை தொடர்பாக வழிகாட்டுதலை வழங்கினார். பாடசாலை பற்கிச்சையாளர் திருமதி வித்யாசினி அவர்கள் பற்கள் துலக்கும் முறையை (Brushing Method) விளக்கிக் கூறினார். பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைகளை சுத்தம் செய்வது (Hand Washing) தொடர்பான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்ததுடன், சுகநலக் கல்வி வழங்கினர்