யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி,ஆரம்பித்து வைத்தார்



 


யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக இன்று ஆரம்பித்து வைத்தார.

 இவ்வாண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை ஜனாதிபதி பாராட்டினார்.