( வி.ரி. சகாதேவராஜா)
புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய 180 புள்ளிகளைக் பெற்ற
சம்மாந்துறைவலய புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ்ஸை, கல்முனை நெற் இணையத்தளத்தினர் கல்முனைக்கு அழைத்து நேர்காணல் செய்து பரிசு வழங்கி பாராட்டிக் கௌரவித்தனர்.
புதுநகர் பாடசாலையில் இம்முறை 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் அதிகூடிய 180 புள்ளிகளைப் பெற்ற பிரகலதன் கனீஸ், கல்முனைக்கு அழைக்கப்பட்டு கல்முனை நெற் பிரதான தலைமையகத்தில் இன்று (5) வெள்ளிக்கிழமை சூட்டோடு சூட்டாக பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
கல்முனை நெற் இணையத்தளப் பணிப்பாளர் புவி.கேதீஸ்ஸின்( கட்டார்) ஏற்பாட்டில், ஆலோசகர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா வழிகாட்டலில், இயக்குனர் சபை உறுப்பினர்களான பி.புவிராஜ், கே.சாந்தகுமார், பி.சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டு, சாதனை மாணவனுக்கும் பாடசாலைக்கும் ஒரு தொகுதி நூல்களை பரிசாக வழங்கி கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் அதிபர் ரி. ஜெயசிங்கம் ,
கற்பித்த ஆசிரியை திருமதி இராமச்சந்திரன், மாணவனின் தாய் திருமதி வனிதா பிரகலதன்,பிரதி அதிபர் கே. கிருஷ்ணமோகன் ஆகியோரும் அத்தருணத்தில் பங்கேற்றனர். அவர்களும் பாராட்டப்பட்டனர்.


Post a Comment
Post a Comment