எழுத்தறிவு தின ஊர்வலம்



 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் "டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்க்குவித்தல்" எனும் தொனிப் பெருளிலாலான சர்வதேச எழுத்தறிவு தின நடைபவனி இன்று 2025.09.29ம் திகதி கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

கல்முனை வலயக் கல்விப் பணிமனை முகாமைத்துவப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான யூ.எல்.றியால் அவர்களின் ஏற்பாட்டிலும், முறைசாராக் கல்விக்குப் பொறுப்பான எம்.எம்.சியாம் (வளவாளர்) அவர்களின் நெறிப்படுத்தலிலும் இன் நடைபவனி மேற்கொள்ளப்பட்டது. 

இதில் கல்முனை வலயக் கல்விப் பணிமனை பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் வளவாளர்கள் , ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

அத்துடன் இந்த நடைபவனியில் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பவனியானது கல்முனை கடற்கரைப் பள்ளிவாயல் கரையோர வீதியினூடாகச் சென்று கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையை அடைந்தது. இவ்வூர்வலத்தில் கல்முனை வலயத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பத்துப் பாடசாலைகள் பங்குபற்றின.

இதில் மாணவர்களையும், பொதுமக்களையும் விழிப்பூட்டும் வீதி நாடகங்களும் மாணவர்களால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.