சட்ட விரோத தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற சந்தேக நபர் கைது




பாறுக் ஷிஹான்


பல்லாயிரம் ரூபா பெறுமதியுள்ள தேக்கு மரக்குற்றிகளை  சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலையp பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.


சம்மாந்துறை பொலிஸார் பிரிவில் வங்களாவடி பிரதேசத்தில் திங்கட்கிழமை (29) குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சம்மாந்துறை, விளினியடி 02 பகுதியைச்சேர்ந்த 49 வயதுடைய நபரே கைதானவராவார்.


குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின்  நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும், கடத்தப்பட்ட மரக்குற்றிகள் உட்பட் சந்தேக நபர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.