13 ஆவது மகளிர் உலகக் கிண்ண போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2ஆம் திகதி வரை இந்தியாவின் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.
இலங்கை: சமாரி அத்தபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவனி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்ன, அச்சினி குலசூர்ய, சுகந்திகா குமாரி, மால்கி மதர, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீர, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்க.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இப்போட்டி தொடங்கவுள்ளது


Post a Comment
Post a Comment