(வி.சுகிர்தகுமார்)
புதிதாக நியமனம் பெற்ற அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று (10) பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்; தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எம்.அன்சார் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர எம்.ஏ.சி.அகமட் உதவிப்பிரதேச செயலாளர்கள் திட்டமிடல் பணிப்பாளர்கள் கணக்காளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அரச துறையில் 30 வருடத்திற்கும் மேற்பட்ட நீண்ட அனுபவத்தை கொண்ட அவர் 9 இற்கும் மேற்பட்ட திணைக்களங்களில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.
2023 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று பொத்துவில் பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் நேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பதவியினை ஏற்றுக்கொண்டார்.


Post a Comment
Post a Comment