( வி.ரி.சகாதேவராஜா)
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய நேர்மையான மனிதர் மறைந்த தன்மன்பிள்ளை கனகசபை அவர்களின் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை தந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
அவர் காலத்தில் நான் பாராளுமன்றம் செல்லாவிட்டாலும் அவருடைய செயல்பாடுகள் அமைதியான நடத்தை தொடர்பாக நான் அறிந்துள்ளேன்.
கடந்த 2004, ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் அதில் கூடிய விருப்புவாக்காக்குகளை அவர் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக கனகசபை ஐயா தெரிவானார் அவருடன் அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஷ்வரி ஆகிய நால்வரும் தேசிய பட்டியல் மூலம் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களுமாக வரலாற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் முதல் தடவையாக மட்டக்களப்பில் ஐவர் பாராளுமன்றம் சென்ற வரலாறு அதுவாகும்.
உறுப்பினர்களும் சொந்த ஊருக்கோ மாவட்டங்களுக்கோ செல்லாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருத்தனர். மட்டக்களப்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டம் செல்லாமல் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருந்தனர்.


Post a Comment
Post a Comment