காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரான ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப். MCM. ஜௌபர் JP அவர்கள் சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.
இ்ன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
اللهم اغفرله والرحمه.....
அன்னார் MJ. ஹஸனுல் ஜெஹீர் (Medical Final Year Student) அவர்களின் அன்பு தந்தையும், சம்மேளன உப தலைவர் ஜனாப். MAM. ஸுஹைர் B.Com (Accountant - RDA) அவர்களின் மச்சானும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் ஜனாப். MCM. அன்வர் அவர்களின் சகோதரரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கமானது இன்ஷா அள்ளாஹ் இன்றைய தினம் 2025.09.22 ஆம் திகதி இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து காத்தான்குடி - 01 மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காவும் ஈடேற்றத்திற்காகவும் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஊடகப் பிரிவு,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.


Post a Comment
Post a Comment