( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலை மாணவனாக தெரிவாகிய சம்மாந்துறை வலயத்தின் அதிகஷ்ர பிரதேச பாடசாலையான மல்வத்தை-02 புதுநகர் அ.த.க. பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸை, அப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்எல்எம்.ஹனீபா வீடு தேடிச்சென்று பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந் நெகிழ்வான சம்பவம் நேற்று (9) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கடந்த பரீட்சையில் கனீஸ் அதி கூடிய 180 புள்ளிகளைப் பெற்று மகத்தான சாதனை படைத்தமை தெரிந்ததே.
இந் நிகழ்வில் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் வீ.வாசீத் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் அ.அஹமட் சபீர், பாடசாலை அதிபர் ஆர்.ஜெயசிங்கம், கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ.பிரதீபன்,ஐ.செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளரின் நேரில் சென்று பாராட்டிய இம் முன்மாதிரியான நிகழ்வைப் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
புதுநகர் பாடசாலையில் இந்த முறை 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 வீத மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)

Post a Comment
Post a Comment