சுகாதார அமைச்சர் Dr. நளிந்த ஜயதிஸ்ஸ,திருக்கோவில் வைத்தியசாலைக்கு விஜயம்



 


சுகாதார அமைச்சர் Dr. நளிந்த ஜயதிஸ்ஸ. நேற்றைய தினம்  திருக்கோவில் வைத்தியசாலைக்கு விஜயம்


ஜே.கே.யதுர்ஷன்...


கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் முனெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மக்களின் பாவனைக்கு கையளிப்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.


இதனையடுத்து நேற்றைய தினம்  (19) பி.ப 5:00 மணிக்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் செய்திருந்தார்....


குறித்த விஜயமானது தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் கரையோபிரந்திய பாராளூமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவரூமான ஜனாப் ஆதம்பாவா தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச  கிளை ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது....


அமைச்சரை  திருக்கோவில் ஆதாரவைத்திய சாலை நிர்வாகத்தினர் அமோவரவேற்பு அளித்து வரவேற்றனர்....


மேலும் அமைச்சர் வைத்திய சாலை சுழல் மற்றம் வைத்தியசாலை வைத்திய பிரிவுகளை பார்வையிட்டார்...


அதனை தொடர்ந்து வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஜனா.மசூத் மற்றும் வைத்திய சாலை அபிவிருத்திகுழுவனரின் ஏற்பாட்டில் வைத்திசாலை அபிவிருத்தி சார்ந்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இக் கலந்துரையாடலில் வைத்திய சாலையில் காணப்படும் முக்கிய தேவைகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன் வைத்திசாலையில் காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் வைத்திய தேவைகளை வைத்திய அத்தியட்சகர் ஏ.பி.மசூத் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு வின் செயலாளர் சட்டத்தரணி ஜெகசுதன் ஆயோரினால் உரை நிகழ்த்தப்பட்டது...


மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் சில குறைபாடுகள் வைத்திய தேவைகள் விரைவில் அரசாங்கம் ஊடக சரி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்....


வைத்திய சாலை அபிவிருத்தி குழுவனரால் சுகாதார அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது..


இன் நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான ஜனாப் அதாம்பாவா பாராளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன்,  திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.சசிகுமார், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத், தேசிய மக்கள் சக்தியில் திருக்கோவில் பிரதேச குழுவினர் , வைத்திய சாலை வைத்தியர்கள்  தாதி உத்தியோர்தர்கள்  உள்ளிட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலரும் இவ் நிகழ்வில்  கலந்துகொண்டனர்.