உலக சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு, நாட்டில், இன்று பல்வேறுப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள்



 


கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு


பாறுக் ஷிஹான்


 

உலக சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு,  நாட்டில், இன்று பல்வேறுப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன


கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலய   சிறுவர் தின நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.


இதில் இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம் றிசாட்,பிரதி அதிபர் எம்.ரி.ஏ முனாப்  மௌலவி ,   மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.


மேலும்   சிறுவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும்  கற்றல் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையிலும் ஊர்வலமாக சென்ற மாணவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யாதீர்கள் எங்கள் நாடு எங்கள் கைகளில் கல்வி என்பது கண்களை திறக்கும் இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என சுலோகங்களை ஏந்தி பொதுச்சந்தை ஊடாக நகரை சுற்றி வருகை தந்தனர்.


இதன் போது அம்மாணவர்களுக்கு கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பால் பக்கேற்றுக்களை வழங்கி உற்சாகம் ஊட்டி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.


இதனிடையே இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஒரு தொகுதி சொக்லேட்டுக்களை தொழிலதிபர் மாஜீத் வழங்கி வைத்தார்.


 இதன் போது மாணவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டு கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இடம் பெற்று முடிந்தது.


சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.


இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம் றிசாட் கருத்து தெரிவிக்கையில் 



ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றையஉலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம்  விளங்குகின்றது. சிறுவர்துஷ்பிரயோகம்  என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம்முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரியபிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. 


சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடுஅவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன. இவ்வாறான உரிமைமீறல்கள்இ துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பத காகப் பல கொள்கைகள் மற்றும் பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றியகொள்கையானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் ஐ.நா சபையானது 18வயதுக்குட்பட்ட  அனைவரையும்சிறுவர்கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும்.



ஆனால் இன் றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதேவளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என குறிப்பிட்டார்.