பெரும் போட்டிக்கு மத்தியில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை சனே டகாய்ச்சி பெற்றுள்ளார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி, தன்னுடன் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களையும் தோற்கடித்து ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றார்.
இது கட்சித் தலைமைப் பதவியில் அவர் வகிக்கும் மூன்றாவது வெற்றியாகும்.
எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒன்றுகூடலில் சனே டகாய்ச்சி ஜப்பானின் புதிய பெண் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment