கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் காந்தாரா செப்டர் - 1 உள்ளிட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வார காலமாக இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளன.
காந்தாரா செப்டர் - 1, தே கால் ஹிம் ஓஜி உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை இலக்கு வைத்து செப்டெம்பர் 25 மற்றும் ஒக்டோபர் 2 ஆம் திகதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நள்ளிரவில் சொகுசுக் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் திரையரங்குகளின் மீது சேதம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்கும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
.webp)

Post a Comment
Post a Comment