பாறுக் ஷிஹான்
தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச பிரதேச மக்கள் தொடர்பாடல் பணிமனை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
திங்கட்கிழமை (27) தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச பிரதான செயற்பாட்டாளர் எம் எல் சம்சுன் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த மக்கள் தொடர்பாடல் பணிமனையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின்தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ. இப்திகார் அஹமட் , பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் எஸ் எம் ஆரிப், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச செயற்ப்பாட்டாளர்களான ஐ எம் சதாத், ஜாபிர் உட்பட ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment