நூருல் ஹுதா உமர்
கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கடந்த 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்மொழித் தினம் தேசிய மட்ட போட்டி நிகழ்வில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை முஸ்லிம் நிகழ்ச்சி (திறந்த போட்டி) வார்ப்பு நாடகம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தங்கப்பதக்கம் வென்று மேலுமொரு சாதனையை படைத்துள்ளது
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அம் மாணவர்களை பயிற்றுவித்த யூசுப் முஹம்மது அஷ்ரப் ஆசிரியருக்கும், பழைய மாணவர் அ.லே. முஸ்பிர் அஹமட், இவர்களோடு இணைந்து தொழிற்பட்ட திருமதி அ.ற.சித்தி அன்வரா ஆசிரியைக்கும், தமிழ் பாட ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் கல்லூரி முதல்வர் அ.அப்துல் கபூர் அவர்களும் அஷ்ரக் சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்த தங்கப்பதக்கத்துடன் 2025 தேசிய மட்ட தமிழ் மொழித்தின போட்டியில் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment