திருக்கோவில் கல்வி வலயத்தில், கெளரவிப்பு



வி.சுகிர்தகுமார்   


 திருக்கோவில் கல்வி வலயத்தில் இவ்வருடம் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 127 மாணவர்கள் மற்றும் கற்பித்த 40 ஆசிரியர்களையும் கௌரவித்து மாணவர்களுக்கான வங்கிக்கணக்கினையும் ஆரம்பித்து கையளிக்கும் நிகழ்வு தேசிய பாடசாலையான தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று மாலை (16) நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில் அம்பாரை மாவட்ட தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.குணபாலன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் சு.கரன் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.இரவீந்திரன் போதகர் எஸ்.டி.தயாசீலன் சிவஸ்ரீ கிருபாகரசர்மா தேசிய பாடசாலையின் அதிபர் கே.கங்காதரன் வங்கியின் முகாமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிதிகளையும் மாலை அணிவித்து கௌரவித்து பான்ட் வாத்திய குழுவினரின் இசையோடு வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் பின்னராக சமய நிகழ்வுகளுடன் ஆரம்பமான கௌரவிப்பு நிகழ்வில் தவிசாளர் மற்றும் கலந்து கொண்ட அதிதிகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டி உரையாற்றிளர்.
தொடர்ந்து ஆசிரியர்கள் 40 பேரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 127 மாணவர்களுக்கும் வங்கிக்கணக்கில் 5000 ரூபா வைப்பிலிடப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகமும் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொதிகளும் நினைவுச்சின்னங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கான முழுப்பங்களிப்பும் தவிசாளர் சு.சசிகுமார் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.