ஏறாவூர் பற்று,பிரதேச சபை உறுப்பினர் வீட்டிற்கு, தீ வைப்பு



 


தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தனின் வீட்டிற் விஷமிகளினால்  தீ வைக்கப்பட்டு வீடு முற்றாக எரிந்துள்ள நிலையில் அவ் சம்பவம் தொடர்பில் நான் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தேன். என்னுடன் ஏறாவூர் பற்று  துணைத் தவிசாளர் சர்வானந்தன் அவர்களும் சமூகமளித்திருந்தார்.


தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் அவர்கள் மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் ஒருவர். அவர் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையை நிறுவப்படுவதற்கு எதிராக மிகத் தீவிரமாக செயற்பட்டு அதற்கு எதிராக பிரதேச சபையினால் பிரேரணை ஒன்றை முன்வைத்து அதன் ஊடாக புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்துவதற்கான பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளது.


இவ்வாறான சூழ்நிலைகளில்  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவருடைய வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இரு கிழமை சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத விடத்து எமது வலியுறுத்தலில் விசாரணைகள் மேற்கொள்ளப் படுகின்றது.  இவ் விசாரணைகளை நடாத்தி குறித்த சம்பவம் யாரால்? எதற்காக? என்ன நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது குறித்து மிக வரைவில் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்,‌ உறுப்பினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


#Shanakiyan #MP #TNA #ITAK #Tamil #Parliament #lka